பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்லும் அமைச்சர்.! இறங்கி அடிக்கும் ஆர்.பி உதயகுமார்

விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்று வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் பதில் உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

RB Udayakumar has insisted that the DMK government should provide relief to the delta farmers

விவசாயிகளுக்கான திட்டங்கள்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறிய கருத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு திட்டங்களை செய்தார்.   காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை மாசுபடுவதை மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டம்தந்தார். நீர்நிலைகளை மேம்படுத்தும் வண்ணம் 1,132 கோடி மதிப்பில் 5,586 நீர்நிலைகளை மேம்படுத்தி வரலாற்றுச் சாதனை. அதேபோல் 9,006 கோடி அளவில்  50.13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டில் அம்மாவின் ஆட்சியில் 5,318 கோடி அளவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது இதன்மூலம் 12 லட்சம் சிறு ,குறு விவசாயிகள் பயன்பட்டனர் .அதேபோல் 2021 ஆம் ஆண்டில் 12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  5ஆண்டுகளில்  இருமுறை விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு, அவிநாசி திட்டம்1,652 கோடியின் செயல்படுத்தப்பட்டது, 

குறுவை பயிர் சேதம் குறித்து ஈபிஎஸ் அறிக்கை... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

அதேபோல் 58 கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10,41,315 விவசாயிகளுக்கு, 827கோடி மதிப்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.  கடந்த 2017 ஆம் ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2,247 கோடி அளவில் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. 14,440 கோடியில் விவசாயிகளின் 100 ஆண்டு கோரிக்கையான காவிரி,வைகை, குண்டாறு இணைப்புதிட்டம் புதுக்கோட்டையில் அடிக்கல்  நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் வறட்சி  மாவட்டங்கள் செழிப்படையும். முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை மூன்று முறை 142 அடியாக தேக்கப்பட்டது, இப்படி அடுக்கடுக்கான திட்டங்களை விவசாயிகள் முதல்வர் எடப்பாடியார் சாதனை படைத்துள்ளார். தற்போது டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று எடப்பாடியார்  கோரிக்கை வைத்தால், அதற்கு வேளாண் துறை அமைச்சர் புள்ளி விவரம் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறார், நிவாரண உதவியை இன்று தருகிறோம், நாளை தருகிறோம் என்று சொல்ல தயக்கம் ஏன் ? புள்ளிவிபரம் மிஸ்டேக் என்று  கூறி போகாத ஊருக்கு வழி சொல்லும் வகையில் அமைச்சர் பதில் உள்ளது. 

ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

திமுக வாக்குறுதி என்ன ஆச்சு..?

கடந்த திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏரி,குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டத்திற்கு  10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள், 2,000 கோடியில் 200 தட்டுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். சென்னை நகர் ஆறுகளை பாதுகாப்பிற்கு 5,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள். பேச்சுப்பாறை அணை சீரமைக்கப்படும். நொய்யல் ஆறு சீர்படுத்தி, பவானி ஆறு,அமராவதிஆறுகளில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டம் போட்டார்கள், பெரியார் வைகை பிரதான பாசனக்கால் வாயிலிருந்து இருந்து சாத்தையார் அணைக்கு புதிய கால்வாய் அமைத்து, சாத்தையார் அணை ஆயகட்டுபகுதியை அதிகரிக்கப்படும் என்று கூறினார்கள். கடலூர் வெள்ள பாதுகாப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்ட அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் எதுவும் செய்தார்களா?


புதிய விஞ்ஞானி எம்ஆர்கே

விவசாயிகள் நலம் சார்ந்து எடப்பாடியார் கோரிக்கை வைத்தால் அந்த புள்ளி விவரத்தை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும், நீங்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேற்றிலே இறங்கி எடப்பாடியார் ஆய்வு செய்து நிவாரணங்கள் வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை, வேளாண் துறை ஆகிய துறைகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்று வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் பதில் உள்ளது. விவசாயிகளுக்கு வேதனைக்கு விடை கேட்டால் இன்று தருவோம், நாளைதருவோம் என்று கூற வேண்டியது தானே? அதற்கு பதில் அறிக்கையில் எழுத்து பிழை உள்ளது என்று புதிய விஞ்ஞானி போல் கண்டுபிடித்து வேளாண்துறை அமைச்சர் பதில் கூறுகிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

400 தமிழர்களை கடத்திய சமூக விரோத கும்பல்..! துப்பாக்கி முனையில் மிரட்டல்..? அலறி துடிக்கும் ராமதாஸ்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios