அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இரவு வழக்கம் போல் குடும்பத்தினருடன் சாப்பிட்டு முடித்தார். சிறிது நேரம் புத்தகங்களை படித்த அவர், படுக்கையறைக்கு சென்றார்.

அப்போது, அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது.

உடனடியாக அவரை, அலுவலக ஊழியர்கள், டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சோனியா காந்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், உணவு நச்சு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வாரணாசியில் சென்ற அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட சோனியா காந்தி, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.