ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு… பணம் எடுக்க வந்த இளைஞர்கள் அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ!!
மகாராஷ்டிரா அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினம்தோறும் வித்தியாசமான வீடியோ அல்லது அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பாம்புகளின் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஷூக்குள் பாம்பு இருப்பது, இருசக்கர வாகன சக்கரம், முகப்பு விளக்கு பதிகளில் பாம்பு இருக்கும் வீடியோ சமீபமாக வைரலானது.
இதையும் படிங்க: இந்தியாவில் அமைகிறது மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை… சுமார் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு!!
அந்த வகையில் தற்போது ஏடிஎம் மையத்தில் பாம்பு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு இருந்துள்ளது. இதை அறியாத மூன்று இளைஞர்கள் அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: காங்க்ரா மினியேச்சர் ஓவியம் டூ கின்னௌரி ஷால் வரை - ஜி20 தலைவர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசுகள் !
அப்போது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுக்குறித்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையே இந்த செய்தி அங்குள்ள அனைவருக்கும் பரவியதை அடுத்து அனைவரும் பீதியடைந்தனர். பின்னர், அங்கு வந்த பாம்புபிடி வீரர்கள் அங்கிருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.