அரியவகை பாதுகாக்கப்பட்ட பிரிவை சேர்ந்த (gecko snake ) கெக்கோ ஸ்னேக் என்று அழைக்கப்படும்  பாம்பை கடத்த முயன்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திய பாம்பின் மதிப்பு 9 கோடி என மதிப்பிட்டுள்ளனர்.  

பச்சை நிறத்தில் கருப்பு கோடுகள் உள்ளது போல் காணப்படும் இந்த கெக்கோ ஸ்னேக் உலகில் மிக, மிக அழிந்துவரும் ஊர்வன உயிரினத்தில் உள்ளன.

இந்த தக்சக் பாம்புகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசத்தம், மேற்கு வங்கத்தில் அரிதாகக் காணப்படுகிறது. இந்தப் பாம்புகளுக்கு சீனா, ஜப்பானில் போன்ற நாடுகளில் மருத்துவ உபயோகத்திற்காக அதிக தொகை கொடுத்து வாங்க படுகிறது.

இதனால் இதை பலர் கடத்தி விற்று வருகிறார்கள். இதனை தடுக்கும் பொருட்டு  மத்திய அரசு அரிய, அழிந்துவரும் ஊர்வன, விலங்குகள் பட்டியலில் வைத்துள்ளது. இதைக் கடத்துவதும், கொல்வதும் குற்றமாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்ட போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு சக்கர சோதனையிட்ட போது அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையே போலீஸார் பிரித்துக் காட்டக் கூறினார்கள். சாக்கு மூட்டையைப் பிரித்தபோது, அதில் அரியவகை கெக்கோ ஸ்னேக்  இருந்துள்ளது.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பாம்பைக் கடத்தியவர் பெயர் இஷா சேக் என்றும், முர்ஷிதாபாத்தில் உள்ள பராக்கா பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

 பாம்புகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. சர்வதேச சந்தையில் இந்த கெக்கோ  பாம்பின் விலை ரூ,9 கோடி பெறும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் தற்போது இந்தப் பாம்பு உள்ளூர் வனத்துறையினரிடம் ஒப்படிக்கப்பட்டுள்ளதாகவும்.  இதன்பின், ஜாங்கிபுர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சேக்கை ஆஜர்படுத்தி, போலீஸார் மேல் விசாரணைக்காகக் காவலில் எடுத்துள்ளனர்.

இந்த பாம்பில் இருந்து விஷக்கடி மருந்துகள், தோல் வியாதிகள், கேன்சர், ஆஸ்துமா, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மருந்து தயாரித்து கொடுக்கிறார்கள். இப்படி கொடுக்கப்படும் மருந்துகள் உடனடியாக செயல்பட்டு நோயின் தன்மையை குணப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இதனாலேயே இந்த பாம்பை அதிகம் கடத்துவதும் அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.