மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷனெல் இரானி, அர்ஜுன் பல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் உள்ள கிம்சார் கோட்டை அரண்மனையில் நேற்று இந்த திருமணம் நடைபெற்றது. ஷனெல் இரானி திருமணத்தில் சிவப்பு நிற லெஹெங்காவை அணிந்திருந்தார், அவரது கணவர் அர்ஜுன் பல்லா சிவப்பு தலைப்பாகையுடன் பாரம்பரிய பழுப்பு நிற ஷெர்வானியை அணிந்திருந்தார்.
இதையும் படிங்க: அதானி நிறுவனம் மீதான புகார் விவகாரம்... செபி பதிலளிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்!!

இவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திருமண மேடையில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த திருமண விழாவில் இருந்து ஸ்மிருதியின் புகைப்படம் ஒன்றை பாஜக தலைவர் தானே சிங் சோதா வெளியிட்டுள்ளார். அதில், மதிப்புக்குரிய திருமதி ஸ்மிருதி இரானிஜியின் மகளின் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், ஸ்மிருதி இரானி பாரம்பரிய சிவப்பு நிற புடவையுடன் சிவப்பு கழுத்துப்பட்டையும் தங்க காதணிகள் மற்றும் வளையல்களுடனும் காணப்பட்டார்.
இதையும் படிங்க: மிடில் கிளாஸ் மக்களை பட்ஜெட் வலிமைப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி புகழாரம்
முன்னதாக மகளின் திருமணத்திற்காக கடந்த 8 ஆம் தேதி காலை ராஜஸ்தானுக்கு வந்த ஸ்மிருதி இரானி சாலை வழியாக நாகூருக்குச் சென்றுள்ளார். ஷனெல், ஸ்மிருதி இரானியின் கணவர் ஜூபின் இரானியின் முதல் மனைவி மோனாவின் மகள். ஸ்மிருதி மற்றும் ஜூபினுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மகன் ஜோர் மற்றும் மகள் ஜோயிஷ். மூன்று குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்துள்ளனர். டிசம்பர் 2021 இல், ஸ்மிருதி தனது மகள் ஷனெல்லின் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் அர்ஜுனை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்றார்.
