அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் புகார் விவகாரத்தில் செபி அமைப்பு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் புகார் விவகாரத்தில் செபி அமைப்பு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பங்குச்சந்தையில் தங்கள் பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டியது. மேலும் அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளதாகவும் அதானிகுழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பிபிசி சேனலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிவடைந்தது. இதேபோல் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றின் பங்குகளும் சரிவை கண்டன. இதை அடுத்து எதிர்கட்சிகள் இந்த சம்பவம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் சட்டசபையில் சலசலப்பு! வித்தியாசம் தெரியலீங்க! மன்னிப்புக் கோரிய அசோக் கெலாட்

இதனிடையே பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்துவதிலிருந்து செபி செயலற்று விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதானி குழும விவகாரத்தில், தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பற்றி மத்திய நிதியமைச்சகம் மற்றும் செபி ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.