ராஜஸ்தான் மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை வாசிப்பதற்கு பதிலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் வாசித்ததால் அவையில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநில பட்ஜெட் கூட்டத் தொடரில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை வாசிப்பதற்கு பதிலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் வாசித்ததால் அவையில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, முதல்வர் அசோக் கெலாட் அவையில் மன்னிப்புக் கோரினார்.
பட்ஜெட் பகுதிகள் கசிந்துவிட்டதாகக் கூறி பாஜக எம்எல்ஏக்கள் பட்ஜெட்டை ஒத்திவைக்கக் கோரியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை தொடங்கிய சிலநிமிடங்களில் அரைமணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் காலை 11 மணிக்கு தொடங்கியதும் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
பிபிசி சேனலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசிக்கிறோம் என்பதை அறியாமலே தொடர்ந்து வாசித்தார். அப்போது தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி தலையிட்டுகடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசிக்கிறீர்கள் என்று கூறினார். உடனடியாக மாநில நிதித்துறை அதிகாரிகளை கொறடா ஜோஷி கடிந்து கொண்டார்.
அவையில் வாய்ப்புக்காக காத்திருந்த பாஜக எம்எம்ஏக்கள், இதை சரியாகப் பிடித்துக்கொண்டு அவையின் மையப்பகுதிக்கு வந்துகூச்சலிட்டனர். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாகக் கூறி, உரையை ஒத்திவைக்கக் கோரினர். இதனால் பட்ஜெட் உரை வாசிக்கத் தொடங்கிய சிலநிமிடங்களில் அவையை அரை மணிநேரம் அவைத்தலைவர் சிபி ஜோஷி ஒத்திவைத்தார்
அவை அரைமணி நேரத்துக்குப்பின் மீண்டும் கூடியது. அப்போது பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சி தலைவர் கட்டாரியா எழுந்து, “ பட்ஜெட் உரை எவ்வாறு கசிந்தது, முதல்வருக்கு சரியான பட்ஜெட் உரைகூட தெரியாதா. ஆளுநரிடம் சென்று பட்ஜெட் கூட்டத்துக்கு வேறு தேதியை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்:அமைச்சர் மாண்டவியா பேச்சைக் கண்டித்து திமுக வெளிநடப்பு
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவையை 15 நிமிடங்கள்ஒத்திவைத்து சபாநாயகர் ஜோஷி உத்தரவிட்டார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வீடியோவில் கூறுகையில் “எந்த முதல்வரும் இதுபோல் அபத்தமாக வரமாட்டார்கள். இவ்வாறு மாநில முதல்வர்ஒருவர் செய்தால் மக்கள் எவ்வாறு இவர் ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்
அவை மீண்டும் கூடியதும், முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில் “ நான் தவறான பக்கத்தை வாசித்தமைக்காக மன்னிப்புக் கோருகிறேன். தவறுதலாக வேறு பக்கம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் மனிதத் தவறு” எனத் தெரிவித்தார்
அசோக் கெலாட் மன்னிப்புக் கோரியபின்பும், பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷமிட்டு குழப்பம் செய்தனர். அவையின் மாண்பைக் காக்கக் கோரி பாஜகவினரிடம் சபாநாயகர் கோரினார். ஆனால், தொடரர்ந்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா பேசுகையில் “ பட்ஜெட்டுக்கு புதிய தேதியை ஆளுநரிடம் சென்று கேட்டு மீண்டும் அறிவியுங்கள். பட்ஜெட் ஒத்திவைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்
