மத்திய பட்ஜெட் நடுத்தரக் குடும்பத்து மக்களின் கரங்களை வலிமைப்படுத்தியுள்ளது, காங்கிரஸ் ஆட்சியை விட அதிகமான நிம்மதியளித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் நடுத்தரக் குடும்பத்து மக்களின் கரங்களை வலிமைப்படுத்தியுள்ளது, காங்கிரஸ் ஆட்சியை விட அதிகமான நிம்மதியளித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மும்பையில் 2 வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம், தாவுத் போரா சமூகத்தின் சார்பில் கல்விவளாகம் திறப்பு, மேம்பாலங்கள் திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
சத்திரபதி சிவாஜி ரயில்நிலையத்திலிருந்து-சோலாப்பூர் வரையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கிறார், அதன்பின் மும்பையில் இருந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சாய்நகர் ஷீரடி கோயிலுக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார்.

அப்போது நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்திய பட்ஜெட் நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கு பெரிய நிம்மதியையும், அவர்களின் கரங்களையும் வலுப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, அதிகமான நிம்மதியை நாங்கள் வழங்கியுள்ளோம்
ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதித்தது, ஆனால், பட்ஜெட்டில் ஜூரோ வரிவிதித்துள்ளோம். வர்த்தகம் மற்றும் சந்தை வர்த்தகம் மூலம் நடுத்தரக் குடும்பத்தினர் அல்லது மாத ஊதியம் பெறுவோர் வருமானம் ஈட்டினால் இந்த பட்ஜெட் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். நடுத்தரக் குடும்பத்து மக்களை பட்ஜெட் வலுப்படுத்தியுள்ளது.
எம்.பி.க்கள் ஒரு நேரத்தில் ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி தங்கள் பகுதிகளில் உள்ள ரயில்நிலையங்களில் ரயில்களை நின்று செல்ல உத்தரவிடுங்கள் எனத் தெரிவித்தனர். ஆனால்,தற்போது, வந்தே பாரத் ரயில்களை எங்கள் தொகுதிக்கு அனுப்புங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மும்பை-சோலாப்பூர் வழித்தடம் 455 கி.மீ தொலைவாகும். இந்த தொலைவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 6.30 மணிநேரத்தில் கடக்கிறது. ஏறக்குறைய ஒருமணிநேரத்தை வந்தேபாரத் ரயிலால் சேமிக்க முடியும்.

மும்பை-ஷாய்நகர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 343 கி.மீ தொலைவை 5மணிநேரம் 25 நிமிடங்களில் கடக்கிறது. நாஷிக், திகம்பரேஸ்வர், ஷனி சிங்னாபூர் கோயிலையும்இணைக்கிறது. இதன் மூலம் மும்பையிலிருந்து புறப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை –சோலாப்பூர் வந்தே பாரத் ரயில்கட்டணம் சேர்காருக்கு ரூ.1000, சொகுசு சேர்காருக்கு ரூ.2015 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உணவுடன் சேர்த்து ரூ.1300, ரூ.2,365 என வசூலிக்கப்படுகிறது
மும்பையில் இருந்து ஷீரடிக்கு சேர்காரில் ரூ.840 ஆகவும், சொகுசுஇருக்கைக்கு ரூ.1670 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுடன் சேர்த்து ரூ.917, ரூ.1840 என வசூலிக்கப்படும்.
