Asianet News TamilAsianet News Tamil

ஒரு நாளைக்கு 40 சிகரெட் அடிப்பேன்... முன்னாள் முதலமைச்சரின் அதிர்ச்சி பேச்சு!

புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஒன்று நேற்று கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார்.

smoke 40 cigarettes a per day: Former Karnataka CM Siddaramaiah
Author
Karnataka, First Published Oct 1, 2018, 4:19 PM IST

புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஒன்று நேற்று கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமை அவர் துவக்கி வைத்துப் பேசினார். அப்போது, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் வரை பிடிப்பேன். 

ஒரு முறை எனது நண்பன் வெளிநாட்டில் இருந்து ஒரு பெட்டி சிகரெட்டுகளை வாங்கி வந்தான். அனைத்து சிகரெட்டுகளையும் ஒரேநாளில் பிடித்து தள்ளி விட்டேன். அப்போதுதான் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினமே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது சிகரெட்டை விட்டு ஏறக்குறைய 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் சிகரெட் புகையில் இருந்து வெளியேறும் வாசத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று பேசியிருந்தார். smoke 40 cigarettes a per day: Former Karnataka CM Siddaramaiah

மேலும் பேசிய அவர், பொதுவாகவே தீய பழக்கவழக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள். ஆனால் அப்படி யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம். அதிலும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் மிக மோசமானது. சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இப்போதே அந்த பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். எனவே புற்றுநோய் உருவாகும் முன்பே புகைப்பதை நிறுத்தி விடுங்கள் என்று இளைஞர்களிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.

 smoke 40 cigarettes a per day: Former Karnataka CM Siddaramaiah

சித்தராமையாவின் இந்த பேச்சு முகாமில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இளைஞர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது என்றும் முகாமில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios