ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழப்பு... ஜார்க்கண்ட்டி நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

ஜார்க்கண்ட் மாநில ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

six electrocuted at dhanbad railway station crossing during pole installation

ஜார்க்கண்ட் மாநில ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: கர்நாடக அமைச்சரவை இலாகாக்கள் வெளியீடு: சித்தராமையாவுக்கு நிதி; சிவகுமாருக்கு 2 இலாகா!

உயிரிழந்த அனைவரும் தன்பாத் மற்றும் கோமோ ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஃபிக்ஸட்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. மின்கம்பத்தை அமைக்கும்போது 25 ஆயிடம் வோல்ட் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மூளைச்சாவுக்குப் பின் உடலுறுப்பு தானம் மூலம் 3 நகரங்களில் 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்!

இந்த நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த தடம் வாயிலாக செல்லவிருந்த ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios