muruga mutt:கர்நாடக முருக மடம் மடாதிபதி போக்ஸோ சட்டத்தில் கைது: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் நடவடிக்கை
பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி ஷிவமூர்த்தி முருக ஷரனருவை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்தனர்.
பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி ஷிவமூர்த்தி முருக ஷரனருவை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, மடாதிபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பாக நேற்று மாலை மடாதிபதி ஷிவமூர்த்தியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் இரவு கைது செய்யப்பட்டதாக போலீஸார் அறிவித்தனர்.
ஹாவேரி மாவட்டத்தில் சித்ரதுர்காவில் பிரபலமான முருக மடம் உள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஷிவமூர்த்தி முருகா ஷரனரு இதை நடத்தி வருகிறார்.இந்த மடத்துக்குச் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது.
chitradurga: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: கர்நாடக முருகா மடாதிபதி சிக்கினார்: போக்ஸோவில் வழக்கு
இந்தப் பள்ளியில் படித்துவரும் இரு மைனர் சிறுமிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மடாதிபதி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாதாக புகார் எழுந்தது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சிறுமிகள் மைசூரில் உள்ள ஒரு தன்னார்வஅமைப்பை அணுகி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறி புகார் அளித்தனர்.
இது தொடர்பாக மடத்தின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான பசவராஜன் சித்ரதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளை அழைத்து வந்து மைசூரூ போலீஸிடம் பசவராஜன் புகார் அளித்தார்.
விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்களே சாட்சியம்.. கேராளவில் பிரதமர் மோடி பேச்சு..
இது தொடர்பாக மைசூரு நகர போலீஸார் கடந்த சனிக்கிழமை மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், பாலியல் வன்முறை தொடர்பாக ஐபிசி பிரிவிலும் வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் புகாரில் மடாபதி, பள்ளி விடுதி காப்பாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த குற்றம் சித்ரதுர்காவில் நடந்ததால், மைசூரு போலீஸார் வழக்கை சித்ரதுர்கா போலீஸாருக்கு மாற்றினர். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மடாதிபதி மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக மாடாபதி ஷிவமூர்த்தி தரப்பில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் 2ம்தேதி(இன்று) ஒத்தி வைத்தது.
சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த மாடபதி ஷிவமூர்த்தியை கைது செய்ய தாமதம் செய்வதகைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன. அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.