chitradurga: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: கர்நாடக முருகா மடாதிபதி சிக்கினார்: போக்ஸோவில் வழக்கு
கர்நாடகத்தில் சித்ரதுர்காவைச் சேர்ந்ந்த முருக மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா ஷரனரு மீது இரு சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதையடுத்து, அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
கர்நாடகத்தில் சித்ரதுர்காவைச் சேர்ந்ந்த முருக மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா ஷரனரு மீது இரு சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதையடுத்து, அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
முருக மடத்தின் சார்பில் நடத்தப்பட்டுவரும் பள்ளியில் படித்து வரும் 16 மற்றும் 15 வயதுள்ள சிறுமிகளுக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, மடாதிபதி ஷிவமூர்த்தி முருகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹாவேரி மாவட்டத்தில் சித்ரதுர்காவில் பிரபலமான முருக மடம் உள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஷிவமூர்த்தி முருகா ஷரனரு இதை நடத்தி வருகிறார்.இந்த மடத்துக்குச் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது.
(RIL)ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: முகேஷ் அம்பானி மீது எதிர்பார்ப்பு
இந்தப் பள்ளியில் படித்துவரும் இரு மைனர் சிறுமிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மடாதிபதி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மடத்தின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான பசவராஜன் சித்ரதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளை அழைத்து வந்து போலீஸிடம் பசவராஜன் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரும் மாவட்ட குழந்தைகள் ஆணையத்திடம் நேற்று அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நள்ளிரவில் திடீரென பெய்த கனமழை... மண்ணில் புதைந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி...
அதன்பின் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அரசின் பாலமந்திர் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சிறுமிகளில் ஒரு சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆதலால் மடாதிபதி மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ரதுர்கா நகர போலீஸார் மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா, பள்ளி விடுதி காப்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே மடத்தின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ பசவராஜன் மீது போலீஸில் பதிலுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அனுமதியின்றி குழந்தைகளைக் கடத்தியது, வார்டனை வாலியல் பலாத்காரம்செய்ததாக அவர் மீது மடத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மடத்துக்கு ஆதரவாக ஒருதரப்பினரும், மாடதிபதியை கைது செய்யக் கோரியும், நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரியும் ஒரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால், நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஒருதரப்பினர் வலியுறுத்தினர்.
வெளியானது காங்கிரஸ் தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் தேதி… அக.19ல் வாக்கு எண்ணிக்கை என தகவல்!!
மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா கூறுகையில் “ எனக்கு எதிராகவும், மடத்துக்கு எதிராகவும் மிகப்பெரிய சதி நடக்கிறது” எனத் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் “ மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா மீது எழுந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை முழுமையாக நடந்து முடிந்ததும் உண்மை நிலவரம் தெரியவரும். போக்ஸோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரித்து வரும் நிலையில் அது குறித்து விவாதிப்பது சரியல்ல.
சித்ரதுர்கா மடம் மாநிலத்தில் மிகப்பெரியது. அந்த மடத்தின் மீதுஎழுந்த புகார் வேதனையளிக்கிறது. இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். எந்த விஷயத்தையும் ஊகத்தின் அடிப்படையில் கூற முடியாது. விசாரணை முடிவில் எது வந்தாலும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்