சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்
சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்
சிவசேனா கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனியாகப் பிரிந்தார். இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக துணையுடன்,ஏக்நாத் ஷிண்டே முதல்வராகினார்.

ஏற்றுக்கொள்ளுங்கள்| சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்த உத்தவ் தாக்கரேவுக்கு சரத் பவார் அறிவுரை
அதுமட்டுமல்லாமல் சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் தங்களுக்கே வழங்கக் கோரியும், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் தேர்தல்ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே முறையி்ட்டார். இதற்கு எதிராக உத்தவ் தாக்கரேயும் முறையிட்டு, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஷிண்டேவுக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவும், 13 மக்களவை எம்பிக்கள் ஆதரவும் இருந்தது. உத்தவ் தாக்கரேவுக்கு 15 எம்எல்ஏக்கள் ஆதரவும், 5 எம்பிக்கள் ஆதரவும் மட்டுமே இருந்தது. ஆதலால், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமைக்குத்தான் சொந்தம்” என்று அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்தவழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கவி ஆஜராகி மனுத்தாக்கல் செய்து, உடனடியாக விசாரணைக்கு எடுக்கக் கோரி தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வில் முறையிட்டார்.

பறிபோன சிவசேனா கட்சி| உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை
ஆனால் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில் “ விதிகள் அனைவருக்கும் பொதுவானது, இடது அல்லது வலது அல்லது மத்திய அரசாகஇ ருந்தாலும் சரி. முறையான வழிகள் மூலம் நாளை அணுகுங்கள்” எனத் தெரிவித்தார்
