ஒரு மாநில ஆளுநர் இனிப்பு ஊட்டி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துவதா? கடுப்பாகும் சரத் பவார்..!

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஆளுநர் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி விட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதையும் பார்த்தேன்.  இதுபோன்று நான் எங்கும் பார்த்ததில்லை. 

Sharad Pawar takes a dig at Koshyari for offering sweets to Eknath

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் ஆளுநர் இனிப்பு கொடுத்தது போல் எந்த நிகழ்விலும் பார்த்ததில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக திடீரென சிவசேனா எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். இறுதிவரை போராடிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸிம் பதவியேற்றுக் கொண்டனர். 

இதையும் படிங்க:- பாஜகவில் முதல்வரின் மகன் முதல்வர் ஆக முடியாது.. சந்திரசேகர் ராவை அட்டாக் செய்த பாஜக அமைச்சர்!

Sharad Pawar takes a dig at Koshyari for offering sweets to Eknath

இதுகுறித்து  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்தேன்.  ஆளுநர் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி விட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதையும் பார்த்தேன்.  இதுபோன்று நான் எங்கும் பார்த்ததில்லை. ஆளுநரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருப்பதாக தெரிகிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு மகா விகாஸ் அகாதி தலைவர்களின் பதவியேற்பு விழா நடந்தது.  நானும் அந்த விழாவில் இருந்தேன். சில அமைச்சர்கள் அவர்களின் சிந்தாந்த அடிப்படையிலான சின்னங்கள் அல்லது நபர்களின்  பெயர்களைக் குறிப்பிட்டு பதவியேற்றனர். அதற்கு ஆளுநர் கோஷ்யாரி எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையும் படிங்க:- விரைவில் தமிழகம், தெலங்கானாவில் பாஜக ஆட்சி.. அடுத்த டார்கெட் தென்னிந்தியாதான்.. கர்ஜனை செய்த அமித் ஷா.!

Sharad Pawar takes a dig at Koshyari for offering sweets to Eknath

உறுதிமொழியை உரிய விதிமுறைகளின் படி எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இருப்பினும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றபோது மறைந்த பால் தாக்கரே மற்றும் மறைந்த ஆனந்த் திகே ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். ஆனால், ஆளுநர் கோஷ்யாரி இந்த முறையை எதிர்க்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் பின்னணிகளைக் கொண்ட பிரதிநிதிகள் பதவியேற்கும் போது ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும்.

Sharad Pawar takes a dig at Koshyari for offering sweets to Eknath

ஆனால், அவர் நடந்துகொள்ளவில்லை.  மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அளுநரைக் கட்டுப்படுத்தும். ஆளுநரின் ஒதுக்கீட்டில் 12 பேரை சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க முந்தைய மகா விகாஸ் அகாதி அரசு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த பட்டியலை அவர் அங்கீகரிக்கவில்லை. தற்போதைய புதிய அரசுக்கு  தேவையான முடிவுகளை விரைவாக எடுப்பார் என்று கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios