பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்தது உண்மைதான்: தெளிவுபடுத்திய சரத் பவார்!

பாஜகவுடனான உறவு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெளிவுபடுத்தியுள்ளார்

Sharad Pawar clarified that he was in talks with BJP

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஏக்நாத்  ஷிண்டே தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகியுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். எனவே, கட்சியை கைப்பற்ற அக்கட்சித் தலைவர் சரத் பவார், அஜித் பவார் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இரு தரப்பிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின்படி, கட்சியை கைப்பற்ற இரு தரப்புக்கு போதுமான ஆதரவு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தங்களது பலத்தை நிரூபிக்க சரத் பவார், அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், யோலாவில் நடந்த பேரணியின் போது, பாஜகவுடனான உறவு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, அஜித் பவார் முகாமுக்கு சென்ற சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சரத் பவார் முகாமுக்கு திரும்பினர். அதில் சிலர் சரத் பவாருக்கு தெரிந்துதான் இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால், பிறகு அவருக்கு இதில் சம்மதம் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே, மீண்டும் இங்கேயே வந்து விட்டோம் என தெரிவித்துள்ளனர். மேலும், பாஜகவுடன் சரத் பவார் ரகசிய உறவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், அஜித் பவார் முகாமை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சாகன் புஜ்பாலின் தொகுதியான நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலாவில் நடைபெற்ற பேரணியில் சரத் பவார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பாஜகவுடன் பலமுறை பேசியுள்ளேன். அதற்காக பாஜகவுடன் கைகோர்க்கிறோம் என்று அர்த்தமில்லை. ஜனநாயகத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்காக அவர்களுடன் அந்த கட்சியினர் கைகோர்க்கிறார்கள் என்று அர்த்தமில்லை.” என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் பற்றி சர்ச்சை கருத்து... திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு


முன்னதாக, என்சிபி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், கடைசி நேரத்தில் சரத் பவார் பின்வாங்கி விட்டதாகவும் அஜித் பவார் தெரிவித்திருந்த நிலையில், சரத் பவார் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், புஜ்பால் போன்ற தவறான நபர்களை களமிறக்கி தவறு செய்து விட்டேன். அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும் என பொதுமக்களிடம் பகிரங்கமாக சரத் பவார் மன்னிப்பு கேட்டார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்கு முன்பும் இதுபோன்று சரத் பவார் பேசியுள்ளார். அந்த சமயங்களில், அந்த நபர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் லோக்சபா எம்.பி.யான உதயன் ராஜே போசலே பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலின்போது, சத்தாரா பகுதியில் பிரசாரம் செய்த சரத் பவார், உதயன் ராஜே போசலே போன்றவர்களை களமிறக்கி தவறு செய்து விட்டதாக கூறி, பொதுமக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். அந்த தேர்தலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரிடம் உதயன் ராஜே போசலே படுதோல்வி அடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios