திருச்சூரில் மின்சாரம் தாக்கிய குரங்கு 41 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், எருமப்பட்டியில் உள்ள மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கிய குரங்கை, வனத்துறையினர், 41 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் காப்பாற்றினர். வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் மச்சாட் கால்நடை மருத்துவ மனையில் குரங்குக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு காட்டுக்குள் விடப்பட்டது.
எருமப்பட்டியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி மின்சாரம் தாக்கியதால் குரங்கின், கை கால் கை, கால் துண்டிக்கப்பட்டது. இதனால் குரங்கின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் தற்போது 41 நாட்கள் சிகிச்சைக்குப் பின், குரங்கு பூரண குணமடைந்தது. கால்நடை மருத்துவர் டாக்டர் அசோக், இதுகுறித்து பேசிய போது “ குரங்கை முதலில் பார்த்தபோது, அது உயிர்வாழும் என்ற நம்பிக்கை இல்லை. குரங்கின் தலை தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. குரங்கின் கண்கள் மூடியே இருந்தன.
எவ்வளவு சொல்லியும் கேட்கல.. மணமேடையில் வரம்புமீறிய மணமகன் - அடுத்த நொடியே விவாகரத்து கேட்ட பெண்!
முதல் கட்ட சிகிச்சையில் ஹோமியோபதி மருந்துகள் மற்றும் கண் சிகிச்சை ஆகியவை அடங்கும். இறுதியாக ஒரு வாரம் கழித்து சாப்பிட ஆரம்பித்தது. குரங்கு சாப்பிட ஆரம்பித்த பிறகு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. பின்னர், பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உடல் நலம் தேறி வந்த குரங்கு சமீபத்தில் காட்டுக்குள் விடப்பட்டது." என்று தெரிவித்தார். உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குரங்கு பூரண குணமடைந்ததையடுத்து வனத்துறை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
