திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி! இலவச டோக்கன் விநியோகத்தில் நடந்த விபரீதம்!

Tirupati stampede: திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் பலியாகியுள்ளனர். சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்கக் குவிந்தபோது இந்த விபரீதம் நடந்துள்ளது.

Several people killed in stampede at Tirupati Temple in Andhra Pradesh sgb

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் பலியாகியுள்ளனர். சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்கக் குவிந்தபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. பலியானர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் பெயர் மல்லிகா என்றும் தெரியவந்துள்ளது.

நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ராம்நாராயண் ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பக்தர்களின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதாக அவரது அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் அதிகாரிகளுடன் பேசியுள்ளார்.

சந்திரயான்-4 முக்கியமான பணி! நாட்டுக்கு நன்றி கூறிய புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு் உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் தரிசனத்திற்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் புதன்கிழமை முதல் டோக்கன்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) செய்துள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்த மக்கள், ஒரு நாள் முன்னதாகவே டோக்கன் மையங்களில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

உலகின் தலைசிறந்த சிங்கிள் மால்ட் விருதை வென்ற இந்திய விஸ்கி கோடவன் 100!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios