வரதட்சணையில் பிரிட்ஜ் கொடுக்காததால் கொந்தளிப்பு.. அடித்து கொல்லப்பட்ட 7 மாத கர்பிணி - மாட்டிய சொந்தங்கள்!
பீகார் மாநிலம் பூர்னியாவில், தங்களுக்கு வரதட்சணையாக தருவதாக கூறிய குளிர்சாதனப் பெட்டியை கொடுக்காததால், 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர், அவருடைய கணவன் வழி சொந்தங்களால் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கூரி பேகம் என்ற அந்த 30 வயது பெண்ணுக்கு, கடந்த 2012ம் ஆண்டு, மோமினத் ஆலம் என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த 9 ஆண்டு குடும்ப வாழ்க்கையில் ஏற்கனவே அந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கொல்லப்பட்ட அந்த பெண், ஐந்தாவது முறையாக கர்ப்பமான நிலையில் தான் பவானிபூரில் உள்ள பேலா பிரசாதி என்ற இடத்தில் உள்ள, அவருடைய கணவரின் உறவினர் வீட்டில் மரமான முரையில் இறந்து கிடந்துள்ளார்.
உடனே அங்கூரியின் உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு இந்த நிகழ்வு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பின் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த கணவனின் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்! 3 பேர் சுட்டுக்கொலை... பழி தீர்க்க வீடுகளுக்குத் தீ வைப்பு!
பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக பூர்ணியா சதர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததில், அந்த பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது, இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அங்கூரியின் சகோதரர் கவுசர் ராஜா கூறுகையில், "எனது சகோதரி குளிர்சாதன பெட்டிக்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். வரதட்சணையில் பிரிட்ஜ் கொடுக்காதது தான் இந்த கொலைக்கான காரணம் என்றும், இதற்கு முன்பும் ஒருமுறை அந்த கணவர் தனது சகோதிரியை மிருகத்தனமாக தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார்.