PM Modi : மொத்தம் 508.. தமிழகத்தில் மட்டும் 18.. ஊரையே திரும்பி பார்க்க வைத்த பிரதமர் மோடி - திடீர் ட்விஸ்ட்
508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
நாடு முழுவதும் மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மறுவடிவமைக்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளை முடிக்க ரயில்வே துறை இலக்கு வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை (06 ஆகஸ்ட்) நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டத்திற்கு ₹24,470 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி ரயில்வே வட்டாரங்களில் கூறப்படுவதாவது, “இது ஒரு வரலாற்று நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ரயில் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 2025க்குள் இந்த நிலையங்களின் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!
இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை பிரதமர் கண்காணித்து வருவதாகக் கூறிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்துவது எங்கள் அரசாங்கத்தின் முக்கிய கவனம். இந்த ரயில் நிலையங்களின் முன்னேற்றத்தை நமது பிரதமர் மோடி நேரில் கண்காணித்து வருகிறார். இந்த 508 நிலையங்களுக்கு அடித்தளத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த 508 நிலையங்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளன. , குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15 மற்றும் கர்நாடகாவில் 13 ஆகும்.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!