Asianet News TamilAsianet News Tamil

ஆபரேஷன் அஜய்: 235 இந்தியர்களுடன் துருக்கியில் இருந்து டெல்லி வந்த 2வது விமானம்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது.

Second batch of Indians reached Delhi from Israel, 235 people have come from Tel Aviv sgb
Author
First Published Oct 14, 2023, 7:47 AM IST | Last Updated Oct 14, 2023, 9:34 AM IST

பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம் சனிக்கிழமை காலை டெல்லி வந்தடைந்துள்ளது.

இரண்டாவது மீட்பு விமானம் வெள்ளிக்கிழமை டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.02 மணிக்கு விமானம் புறப்பட்டது.  காலை 7 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்து. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் விமானத்தில் வந்த இந்தியர்களை வரவேற்றார்.

இந்த விமானத்தில் டெல்லி வந்துள்ளவர்களில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் டெல்லியில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் அனைவரும் தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் 50,000 கர்ப்பிணிகளுக்கு குடிநீர் இல்லை; அரபு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம்!!

விமான நிலையத்தில் இந்தியர்களுடன் உரையாடிய பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், "இஸ்ரேலில் இருந்து சுமார் 235 பயணிகளுக்கு நாடு திரும்ப வசதி செய்திருக்கிறோம்... இந்த ஆபரேஷன் அஜய் நடவடிக்கை தொடரும். சுமார் 18,000 இந்திய குடிமக்கள் துருக்கியில் உள்ளனர். இது இரண்டாவது கட்டம். நாங்கள் அவர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்வோம்..." என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 7 அன்று காஸாவிலிருந்து ஹமாஸ் பயங்கரவாதக் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே போர் மூண்டது. இரு தரப்பு பகிரங்கமான போரை அறிவித்து மாறிமாறித் தாக்கிக்கொண்டதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இதனால், அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக இந்தியா வியாழக்கிழமை 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தைத் தொடங்கியது. அதன்படி முதல் விமானம் மூலம் 21 தமிழர்கள் உள்பட 212 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள்!விமானம் மூலம் டெல்லி வந்த 212 பேரை வரவேற்றார் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios