பரபரப்பு… பள்ளிகளில் வேகமாக பரவும் கொரோனா… டெல்லியில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்!!
டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் 15 குழந்தைகள் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கொரோனா குறைந்து வந்தாலும் ஒரு சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நொய்டாவில் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இதேபோல் உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகரில் 15 குழந்தைகள் உட்பட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்து தற்போது 121-ஐ எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நொய்டாவில் நேற்று காலை 6 மணி முதல் 44 பேர் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிதாக 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழந்தைகள் யாரும் எந்தப் பள்ளியிலிருந்தும் பதிவாகவில்லை என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுனில் குமார் சர்மா தெரிவித்துள்ளார். மரபணு வரிசைப்படுத்துதலுக்காக 68 மாதிரிகள் டெல்லியில் உள்ள மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே நொய்டா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், உங்கள் பள்ளியில் படிக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது கொரோனா அறிகுறி இருந்தால், உடனடியாக தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு ஹெல்ப்லைன் எண் 1800492211 அல்லது cmogbnr@gmail.com, ncmogbnr@gmail.com, என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
அப்போது அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 2020-ல் கொரோனா பரவத்தொடங்கியது முதல் கௌதம் புத்த நகரில் மொத்தம் 98 ஆயிரத்து 787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களில் 490 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், டெல்லியில், தனியார் பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் மற்றும் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் விடுப்பில் அனுப்பியது. கோரொனா பாதிப்பு சிறிதளவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு விரைவில் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சில பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு கல்வித்துறை விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.