கொளுத்தும் கடும் வெயில் காரணமாக தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் வரும் 22ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்ததுப் போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் கோடை வெயில் வரலாறு காணாத அளவுக்கு கொளுத்தி வருகிறது.

மேலும் பயங்கர அனல் காற்று வீசி வருவதால் தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதற்கேற்ப தேர்வுகளை நாளைக்கும் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடும் வெயில் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப நாளைக்கும் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.