Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக அரசின் Swavalambi Sarathi திட்டத்தில் குளறுபடி.. அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காட்டம் - முழு விவரம்!

கர்நாடக அரசு தங்கள் மாநிலத்தில் வேலையின்மை விகிதத்தை குறைக்க, Swavalambi Sarathiஎன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் மைனாரிட்டி மற்றும் OBC வகுப்பை சேர்ந்தவர்கல் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

SC and STs not included in Karnataka Governments Swavalambi Sarathi Scheme minister Rajeev Chandrasekar heated tweet ans
Author
First Published Sep 14, 2023, 8:44 PM IST

Swavalambi Sarathi திட்டத்தின் மூலம், மாநில அரசு திட்டத்தின் பயனாளிகளுக்கு நிதி மானியங்களை வழங்கும், இதனால் அவர்கள் எளிதாக வாகனங்களை வாங்க ,முடியும், மற்றும் தங்கள் வணிகங்களை முன்னோக்கி நகர்த்த இது பெரிய அளவில் உதவும். இதனால், அவர்களின் வருமானம் அதிகரித்து, இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய ஊக்கம் பெறுவார்கள் என்றும் கர்நாடக அரசு அறிவித்தது.

ஆனால் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வகுப்பு மக்களுக்கும் பயனடையமாட்டார்கள் என்று தனது ட்விட்டர் பதிவின் மூலம் கட்டமாக கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அவர்கள். அவர் வெளியிட்ட பதிவில், சித்தராமையா மற்றும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு வடிவமைத்து, உருவாக்கி, அறிவித்த புதிய ஸ்வாவலம்பி சாரதி திட்டம், முதலில் சிறுபான்மையினருக்கு மட்டுமே பலன் அளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 

தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி: பவன் கல்யாண் அறிவிப்பு!

மேலும் இந்த விவகாரத்தில் இப்பொது எனது ட்வீட் மற்றும் பொது மக்களிடையே எழுந்த கோபத்தின் வெளிப்பாடாக, சித்தராமையா அரசு இந்த Swavalambi Sarathi திட்டத்தில் OBC வகுப்பு மக்களை சேர்க்குமாறு அறிவித்தது. ஆனால் இன்றளவும் கூட SC மற்றும் ST வகுப்பினர் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கட்டமாக கூறியுள்ளார்.

அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்யட்டும், ஆனால் ராகுல் காந்தியின் காங்கிரஸ் /உ.பி.ஏ./ ஐ.என்.டி.ஐ கூட்டணி, திருப்திப்படுத்தும் அரசியலை மட்டுமே செய்யத் தெரியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. இனி அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர்கள் அதை வெளிப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறேன் என்றும் காட்டமாக கூறினார்.

பத்திரிக்கையாளர்களை மிரட்டி அல்லது கைது செய்வதன் மூலம் உண்மை வெளிவருவதை தடுக்க முடியாது என்று கூறிய அவர், நான் சவால் விடுகிறேன், சித்தராமையா மற்றும் சிவகுமார், அனைத்து மதத்தினருக்கும் உண்மையாக இருந்தால், அவர்கள் மாதந்தோறும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும். இது சப்கா சாத் மற்றும் சப்கா விகாஸுக்காகப் பணியாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் வழக்கம் என்றார்.

Swavalambi Sarathi திட்டம் பற்றி எடுத்துக்காட்டாக பின்வரும் விஷயத்தை அவர் கூறினார், அதாவது 50% மானியத்தைப் பயன்படுத்தி ரூ.6 லட்சத்திற்கு வாகனத்தை வாங்கி, மறுநாளே அதை ரூ.5 லட்சத்திற்கு விற்று ரூ. 2 லட்சம் லாபம் பெறலாம். சரியாக இந்துக்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணமும் மற்றும் ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட இந்து சமூகங்களுக்கு கிடைக்காத வண்ணனும் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கன்னடர்களின் பொது வளங்களைப் பயன்படுத்தி, ஒரு சமூகத்திற்கு வெட்கமற்ற முறையில் நன்மை செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மும்பை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான தனியார் விமானம்: 8 பேர் காயம்!

Follow Us:
Download App:
  • android
  • ios