SBI waives charges on IMPS fund transfer of up to Rs 1000
இந்தியாவின் மிகப்பெரும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மின்னணு பரிமாற்றத்தில் இனிமேல் 1000 ரூபாய் வரையிலான பரிமாற்றத்துக்கு கட்டணமில்லை என்று தெரிவித்துள்ளது.
தற்போது வரை சேவை வரி மற்றும் 5 ரூபாய்களைக் கட்டணமாக வசூலித்து வந்தது. ஐஎம்பிஎஸ் என்று அழைக்கப்படும் உடனடி பணப்பரிமாற்ற சேவையில் 1000 ரூபாய் வரையிலான கட்டணங்கள் முழுவதையும் அதாவது சேவை வரி உட்பட அனைத்தையும் நீக்கி விட்டதாக அறிவித்துள்ளது.
சிறிய அளவிலான பணப்பரிமாற்றங்களை இணையத்தில் செய்வதை ஊக்கப்படுத்தவே இத்தகைய அறிவிப்பு என்று அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎம்பிஎஸ் முறையிலான பணப்பரிமாற்றம் மொபைல் போன்களின் மூலமே அதிகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் ரூபாய்களில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்கள் வரை சேவை வரியுடன் ஐந்து ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை சேவை வரியுடன் ரூ.15 கட்டணமாக வசூல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டபின் சேவை வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
