தேர்தல் பத்திர விவரங்களை அனுப்பியது ஸ்டேட் வங்கி! உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் வெளியிடலாம்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது. திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஸ்டேட் வங்கியின் மனுவை தள்ளபுடி செய்த்து.
மேலும், இன்றுக்குள் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களையும், அந்தப் பத்திரங்களை பணமாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகளின் பெயர்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறினால், ஸ்டேட் வங்கி மீது உச்ச நீதிமன்றம் சட்டரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடும் என்று எச்சரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுக்குப் பணிந்து, ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. இனி இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
எஸ்பிஐ அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உச்ச நீதிமன்றம் மார்ச் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, இந்தக் காலக்கெடுவுக்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை பொதுவெளியில் வெளியிடலாம்.
இதனிடையே தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுவது தொடர்பான தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பத்திர வழக்கின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோர வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\
தேர்தல் பத்திர விவரங்களை அனுப்பியது ஸ்டேட் வங்கி! உடனே வெளியிடுமா தேர்தல் ஆணையம்?