Lok Sabha Election 2024: காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ராகுல் காந்தி தொகுதி எது?
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் 43 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. 43 தொகுதிகளுக்கான இந்த வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கவுரவ் கோகோய் அசாமின் ஜோர்ஹாட் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அறிவிக்கப்பட்ட 43 வேட்பாளர்களில், 33 பேர் ஓபிசி, எஸ்சி, எஸ்டி அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 25 பேர் ஐம்பது வயதுக்குக் குறைவானவர்கள்.
ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பைக்கூட தாண்டவில்லை என்பது பொய்: தமிழக அரசு விளக்கம்
முன்னதாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜ்நந்த்கான் தொகுதியிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி.வேணுகோபால் கேரளாவின் ஆலப்புழா தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவகிகப்பட்டது.
ஆழ்கடல் அதிசயம்! நட்சத்திர வடிவ வினோத விலங்கு உள்பட 100 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!