Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை

தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுது.

SBI Requests Supreme Court To Extend Deadline To Give Electoral Bonds Info sgb
Author
First Published Mar 4, 2024, 10:02 PM IST

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது. மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகக் கூறி சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுது.

ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு ஆதாயம் தேடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இரட்டைக் குழந்தைகளைப் பார்க்காமல் வந்த தொண்டர்... சென்னையில் பிரதமர் மோடியை நெகிழ வைத்த சந்திப்பு

SBI Requests Supreme Court To Extend Deadline To Give Electoral Bonds Info sgb

எஸ்பிஐ இந்த பத்திரங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது.

கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுவதும், நன்கொடையாளர்களின் ரகசியத்தன்மையைப் பேணுவதும் இந்த திட்டத்தின் நோக்கம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் கறுப்புப் பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் மட்டுமே ஒரே வழி அல்ல என்று கூறியது.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதனை முன்மொழிந்தார். இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிபிஎம், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான இலாப நோக்கற்ற சங்கம் ஆகியவை ஆகியவை வழக்கு தொடர்ந்திருந்தன.

புதிய சீசன்... சிஎஸ்கே அணியில் புதிய ரோல்... தோனி வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios