பாரத ஸ்டேட் வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை, 0. 9%ஆக   குறைத்துள்ளது.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்டவும், சிறு, குறுந்தொழில் தொடங்கவும், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதாவது, தற்போதைய வட்டியான 8.9 சதவீதத்தில் இருந்து, 8% ஆக குறைத்துள்ளது.

இதேபோல், எஸ்.பி.ஐ வங்கியின் கிளை வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. ஐ.டி.பி.ஐ., வங்கி 0.6% குறைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை 8.20%ஆக ஆக குறைத்துள்ளது.