Asianet News TamilAsianet News Tamil

வாடிக்கையாளர் தலையில் குண்டை போட்ட SBI வங்கி… EMI கட்டுவோருக்கு சிக்கல்!!

எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sbi hikes its interests rate and by this emi raised
Author
India, First Published May 16, 2022, 7:06 PM IST

எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக  அறிவித்துள்ளது. அதன்படி அடிப்படை வட்டி விகிதம் 7.10 விழுக்காட்டிலிருந்து 7.20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கியில் கடன் செலுத்துவோருக்கான EMI தொகை மேலும் அதிகரிக்கும். அதனால் EMI செலுத்துவோர் இனி வரும் மாதங்களில் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் வீட்டுக் கடன், பர்சனல் லோன் மற்றும் வாகன கடன் போன்ற கடன்களை வாங்கியோருக்கு EMI பல மடங்கு உயரும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்குவோர் இரு தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவர்.

sbi hikes its interests rate and by this emi raised

கடந்த இரண்டு வருடங்களாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை நடத்திய ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தியது. உலகம் முழுவதும் பணவீக்கம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை சமாளிக்க பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் வருகின்றது. அந்த வரிசையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் ஆகும். இது உயர்த்தப்படும் போது கடன்களுக்கான EMI உயரும். அதனைப்போலவே பிக்ஸட் டெபாசிட் வட்டி வீதமும் உயரும். எஸ்பிஐ வங்கி கடந்த 30 நாட்களில்  2வது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது.

sbi hikes its interests rate and by this emi raised

அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.20% ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதுபோல் ஒரு மாதம், மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதங்களும் 0.1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 10 பிபிஎஸ் அதிகரித்து 6.85% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 7.15% ஆகவும் அதிகரித்துள்ளது. அதுபோலவே இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1% அதிகரித்து 7.40% ஆகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.50% ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும். இதன்காரணமாக, மேற்கண்ட வங்கிகளில் தனிநபர், வீடு, வாகன கடன் வாங்கியுள்ளவர்களின் மாத தவணையான இஎம்ஐ அதிகரிக்கும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios