பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்ட, செந்தில் அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார். அதில் கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களைப் புதைத்ததாக முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த புகார் கூறியது பொய் என தெரியவந்ததை அடுத்து அந்த நபர் கைது செய்யப்படார்.
தர்மஸ்தலா விவகாரம்
இந்த விவகாரத்தில், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்ததில் தர்மஸ்தலா கோவிலின் புனிதம் புகழைக் கெடுக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புகார் தாரருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜனார்த்தன ரெட்டி புகார்
மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், உயர்மட்டக் குழுவின் அழுத்தம் காரணமாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார். இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட செந்திலை விசாரிக்க வேண்டும் என்றும் ரெட்டி கோரியிருந்தார்.
அவதூறு வழக்கு தொடர முடிவு
தற்போது, ஜனார்த்தன ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறியுள்ளார். இதன் காரணமாக, ஜனார்த்தன ரெட்டி மீது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
