varsha sanjay raut: சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மனைவியும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜர்

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தும் இன்று காலை அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

Sanjay Raut's wife appears before the ED in Mumbai for questioning in a money laundering case.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தும் இன்று காலை அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

மும்பையில் சாவல் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டுவதில் நடந்த முறைகேட்டில், நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்க வர்ஷா ராவத்துக்கு அமலாக்ககப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை புறநகர் பகுதியான கோரேகான் பகுதியில் 672 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்பந்தம் செய்த நிறுவனம் இதுவரை வீடுகட்டித் தரவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு உறவினர். இந்த நிலமோசடியில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில், சஞ்சய் ராவத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களா? காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?

கடந்த 2007ம் ஆண்டு மும்பைச் சேர்ந்த குருஆஷிஸ் கட்டுமான நிறுவனம், மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்துடன் 672 வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம் செய்தது.

சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவின் ராவத், குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த கட்டுமான நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக இதுவரை ஒருவீடுகூட கட்டித்தரவில்லை. ஆனால், அந்த இடத்தை கூறுபோட்டு தனியாருக்கு ரூ.901.79 கோடிக்கு விற்பனை செய்தது.

குரு ஆஷிஸ் கட்டுமான நிறுவனம் தி மிடோஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி வீடு தேவைப்படுவோரிடம் இருந்து ரூ.138கோடி வசூலித்தது. ஒட்டுமொத்தமாக ரூ.1,039.79 கோடி மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டப்படுகிறது

சுதந்திரத்துக்குப்பின் இந்திய பொருளாதாரத்தின் 10 முக்கிய சாதனைகள்

சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உறவினர் பிரவீன் ராவத், தனது கட்டுமான நிறுவனத்துக்கும், மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடியை தனது உறவினர்கள், நண்பர்கள், நெருங்கிய தொழில்அதிபர்கள் வங்கிக்கணக்குகளில் மாற்றியுள்ளார். இதில் சஞ்சய் ராவத்தின் குடும்பத்தினர் வங்கிக்கணக்கிலும்அந்தப் பணம் வந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், பிரவீன் ராவத்தின் மனைவி மாதுரி ராவத்திடம் இருந்து ரூ.83 லட்சம் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்தப் பணத்தின் மூலம் தாதர் பகுதியில் வர்ஷா ராவத் ஒருவீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அமலாக்கப்பிரிவு விசாரணையில் வர்ஷாராவத், ரூ.55 லட்சத்தை மாதுரி ராவத்துக்கு மாற்றியுள்ளார். இதுபோல் பலமுறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

வர்ஷா ராவத், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய உதவியாளர் சுஜித் பட்கரின் மனைவி ஸ்வப்னா பட்கர் பெயரில் அலிபாக் பகுதியில் உள்ள கிஹிம் கடற்கரைப் பகுதியில் 8 பிளாட் வாங்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்கள் வாங்கியதில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிட, அதிகமான தொகை ரொக்கமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகச்சக்தி வாய்ந்த 10 பெண் அரசியல் தலைவர்கள்

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே வர்ஷா ராவத்துக்கு சொந்தமான ரூ.11.15 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. தாதர் பகுதியில் வர்ஷா ராவத்துக்கு சொந்தமான ஒரு பிளாட், அலிபாக்கில் உள்ள கீகிம் கடற்கரையில் 8 பிளாட்களை வர்ஷா ராவத் வாங்கியிருந்தார் அது முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா ராவத்திடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை ஏற்று இன்று காலை 10.30 மணி அளவில் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் வர்ஷா ராவத் ஆஜராகினார். வர்ஷா ராவத் வருகையையடுத்து, அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன் எச்சரிக்கையாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios