இந்தியாவின் மிகச்சக்தி வாய்ந்த 10 பெண் அரசியல் தலைவர்கள்
அரசியலில் பெண்கள் எந்த அளவுக்கு மீண்டும் மீண்டும் கோலோச்சுகிறார்கள் என்பதற்கு வரலாறு சாட்சி. மரியே அன்டோநெட் முதல் ராணி எலிசபெத் முதல் உலகளவில் பெண்கள் அரசியலில் தங்களுக்குரிய மாண்புக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள்.
அரசியலில் பெண்கள் எந்த அளவுக்கு மீண்டும் மீண்டும் கோலோச்சுகிறார்கள் என்பதற்கு வரலாறு சாட்சி. மரியே அன்டோநெட் முதல் ராணி எலிசபெத் முதல் உலகளவில் பெண்கள் அரசியலில் தங்களுக்குரிய மாண்புக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள்.
இந்தியாவிலும் இதேபோன்று அரசியலில் சக்தி வாய்ந்த பெண்கள் காலந்தோறும் உருவாகிறார்கள், எழுகிறார்கள், மக்கள் மனதில் நிற்கிறார்கள். அவர்களின் மக்களுக்கான திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள், பலதரப்பிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, வரவேற்கப்பட்டுள்ளது. அதேசமயம் விமர்சனத்துக்கும் ஆளாகினர். ஆனால், அவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கும், அவர்கள் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்கும் அவர்களின் பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது.
அந்த வகையில் 10 சக்திவாய்ந்த பெண் அரசியல் தலைவர்களைப் பார்க்கலாம்.
சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நீண்டகாலம் இருப்பவர் சோனியா காந்தியாகத்தான் இருப்பார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருப்பதற்கு சோனியா காந்தியின் தலைமை முக்கியக் காரணம். 2004 முதல் 2014ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவைத்த பெருமை சோனியா காந்திக்குத்தான் சாரும். இந்திய அரசியலில் கடந்த இரு தசம ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெண் அரசியல் தலைவர்களில் சோனியா காந்தி முக்கியமானவர்
சுஷ்மா ஸ்வராஜ்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். மத்தியஅமைச்சராக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக, டெல்லி முதல்வராக என பலபரிமாணங்களில் சுஷ்மா திகழ்ந்துள்ளார். 7 முறை எம்.பியாகவும், 3 முறை எம்எல்ஏவாகவும் சுஷ்மா இருந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா இருந்தபோது, ட்விட்டரில் இவரின் சுறுசுறுப்பும், இந்திய மக்களுக்குசெய்த உதவிகளும், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் மருத்துவ உதவிக்காக விசா கோரியபோதும் மின்னல் வேகக்தில் செயல்பட்டு அவர்களுக்கு உதவி செய்து அனைவரின் மனதிலும் சுஷ்மா நிலைத்தார்.
தோட்டக்கலை நிபுணர் உருவாக்கிய புதிய வகை மாம்பழம்… அமித் ஷா என பெயர் வைத்து அசத்தல்!!
இளம் அமைச்சர்கள் எவ்வாறு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சுஷ்மா இருந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப்பின், வெளியுறவுத்துறையை வகித்த முதல் பெண் சுஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.
ஷீலா தீக்சித்
காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், கட்சியின் வலிமையான பெண்ணாக இருந்தவர் மறைந்த ஷீலா தீக்சித். 1998 முதல் 2013ம் ஆண்டுவரை டெல்லி முதல்வராக ஷீலா தீக்சித் இருந்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியை 3 முறை வெல்ல வைக்க ஷீலா முக்கியக் காரணமாக இருந்தார். 2014ம் ஆண்டுமார்ச் மாதம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஷீலா தீக்சித், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், ஆகஸ்ட் மாதம் ஆளநர் ப தவியை ராஜினாமா செய்தார்.
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர், மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைப்பிடித்த பெருமைக்குரியவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் கால்நூற்றாண்டாக ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சாய்த்து ஆட்சியைப் பிடித்த பெருமை மம்தா பானர்ஜியைச் சாரும்.
மாநிலத்தின் முதல் பெண் முதல்வர், இரு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்த முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மம்தா பானர்ஜிக்கே உரியது.
CAA: குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA) டிசம்பரில் நடைமுறைக்கு வரலாம்: மே.வங்க பாஜக எம்எல்ஏ கணிப்பு
இந்தியாவில் முதல் பெண் ரயில்வே அமைச்சராக இருந்தவரும் மம்தா பானர்ஜிதான். தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரஸுக்கு இணையாக வலிமையான எதிர்க்கட்சியாக மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி உருவாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவின் இரும்புப் பெண்மணிகளில் ஜெயலலிதாவும் ஒருவர். அஇஅதிமுக தொடங்கிய முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் மறைவுக்குப்பின் கட்சி உடைந்தாலும், அதை சிதறவிடாமல், கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தியவர் செல்வி ஜெ.ஜெயலலிதா.
கடந்த 1982ம்ஆண்டு எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து, படிப்படியாக முன்னேறினார். மாநிலங்களவை எம்.பியாக ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அஇஅதிமுக 4 முறை ஆட்சியைப் பிடித்தது. 3 முறை முதல்வராக இருந்து ஆட்சி செய்த ஜெயலலிதா, 4வது முறை தேர்தலில் வென்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி
மாயாவதி , உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர், 4 முறை முதல்வராக இருந்த பெருமைக் குரியவர். இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த ஒருவர் முதல்வரானது மாயாவதிதான். 1997ம் ஆண்டு முதல் 2002வரை பாஜகவின் ஆதரவில் மாயாவதி ஆட்சி செய்தார். இதற்கு முன் 3 முறை முதல்வராக இருந்தாலும் சிறிது காலமே இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், உ.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் இடையே மாயாவதிக்கு பெருத்த ஆதரவு உண்டு.
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளுக்கு (sarais) ஜிஎஸ்டி இல்லை: சிபிஐசி அறிவிப்பு
வசுந்தரா ராஜே
பாஜகவின் மூத்த தலைவரும், குவாலியர் அரச குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் வசுந்தரா ராஜே. 5 முறை எம்எல்ஏவாகவும், 5முறை மக்களவை எம்.பியாகவும் வசுந்தரா ராஜே இருந்தார். 1984ம்ஆண்டு அரசியலுக்கு வந்த ராஜே, பாஜகவில் சேர்ந்து முதல்முறையாக தோல்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாகினார்.
ராஜஸ்தான் பாஜக இளைஞரணி துணைத் தலைவராகவும் வசுந்தரா நியமிக்கப்பட்டார். அதன்பின் பாஜகவில் வசுந்தரா ராஜேவின் வளர்ச்சி வேகமாக இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை முதல்வராக இருந்து கடந்த முறை காங்கிரஸிடம் ஆட்சியை வசுந்தரா ராஜே இழந்தார். பாஜகவின் துணைத் தலைவர்களில் ஒருவராக வசுந்தரா ராஜே உள்ளார்.
அம்பிகா சோனி
காங்கிரஸ் கட்சியில் மறைந்த ஷீலா தீக்சித்தைப் போல் வலிமையான பெண், நீண்டகாலம் கட்சியில் இருப்பவர், மத்தியஅ மைச்சராக இருந்தவர் போன்ற பெருமைக்குரியவர் அம்பிகா சோனி. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியால் காங்கிரஸ்க ட்சிக்கு கொண்டுவரப்பட்டவர் அம்பிகா சோனி. காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவராக அம்பிகா சோனி இருந்தார்,
சஞ்சய் காந்தியுடன் இணைந்து கட்சியில் பணியாற்றியவர் அம்பிகா சோனி. மகிளா காங்கிரஸ் தலைவராகவும்அம்பிகா சோனி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் அம்பிகா சோனி இருந்தார். 4 முறை எம்.பியாகவும், இரு முறை மத்திய கேபினெட் அமைச்சராகவும் அம்பிகாசோனி இருந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க பெண்ணாக இன்றும் அம்பிகா சோனி இருந்து வருகிறார்.
தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே. பாரமதி தொகுதி எம்.பியாக இருக்கும் சுப்ரியா சுலே இதற்கு முன் 2 முறை எம்.பியாக இருந்தவர். சிசுக்கொலைக்கு எதிராக மகாராஷ்டிராவில் சுப்ரிலே சுலே நடத்திய பிரச்சாரங்கள், நடைபயணம், கல்லூரி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் மக்களிடையே இவரை வெகுவாக அடையாளப்படுத்தியது. ராஷ்டரவாதி யுவாதி காங்கிரஸ் என்ற பிரிவைத் தொடங்கி, இளம் பெண்களுக்கு கட்சியில் ஆங்கீகாரம் அளிக்க சுப்ரியா சுலே இந்தப் பிரிவைத் தொடங்கினார். மக்களவையில் சிறப்பாக உரையாற்றும் திறன் கொண்ட சுப்ரியா சுலே, இன்றளவும் சிறந்த மக்களவை எம்.பியாக இருந்து வருகிறார்.
அகதா சங்மா
மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகள் அகதா சங்மா. தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினராக இருக்கும் அகதா சங்மா, மேகாலயாவின் துரா தொகுதி எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வடகிழக்கு மாநிலத்திலிருந்து மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் அகதா சங்மாதான். இதுமட்டுமல்லாமல் இந்திய அரசியலிலேயே இளம் வயதில் அதாவது 29வயதில் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டவரும் அகதா சங்மாதான்.