நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவராக யார் இருபார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவராக யார் இருபார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது.

 இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரத்துக்குப்பின் இந்திய பொருளாதாரத்தின் 10 முக்கிய சாதனைகள்

இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன. 

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி இருவரிடமும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி முடித்திருக்கிறது.

புதிய துணை குடியரசு தலைவர் யார்? பாஜக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துமா எதிர்க்கட்சிகள்.. இன்று வாக்குப்பதிவு.!

இது தவிர நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனைக்கு அடுத்தநாள் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒருபகுதிக்கு அமலாக்கப்பிரிவு சீல் வைத்தனர். 

அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தச் சென்றபோது, யங் இந்தியா நிர்வாகிகளாக இருந்து வரும் மல்லிகார்ஜூன கார்கே, பவன்குமார் பன்சால் இருவரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஏவிவிடுகிறது, அரசியல் பழிவாங்கலை நடத்துகிறது எனக் கூறி காங்கிரஸ் எம்.பிக்கள், நிர்வாகிகள், கட்சியினர் கடந்த சில நாட்களாகட டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதனால் நேஷனல் ஹெரால்டு வழக்கு எந்த திசையில் செல்லும் என்பது சூடுபிடித்துள்ளது.

பிபிசி செய்திகளின்படி, நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியைும் கைது செய்வதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக, அதுகுறித்து அமலாக்கப்பிரிவு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அமலாக்கப்பிரிவு திரட்டிவிட்டதால், கைது நடவடிக்கைக்காக காத்திருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

CAA: குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA) டிசம்பரில் நடைமுறைக்கு வரலாம்: மே.வங்க பாஜக எம்எல்ஏ கணிப்பு

அமலாக்கப்பிரிவு நடத்தும் ஆலோசனைகள், சோனியா, ராகுல் கைதுக்கான வாய்ப்பு இருப்பது குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கும் தெரியவந்தது. இதையடுத்து, ஒருவேளை கட்சியின் இரு தலைமைகள் கைதாகி சிறை சென்றால், கட்சியை வழிநடத்தும் பொறுப்பு யாரிடம் வழங்கப்படலாம் என்பது குறித்தும் காங்கிரஸ் தலைமை ரகசியமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி செய்திகளின்படி, சோனியா காந்தி குடும்பத்துக்கு ஆரம்பகால கட்டத்திலிருந்தே நெருக்கமாகவும், நம்பிக்கைக்கு உரியவராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள்மத்திய நிதிஅமைச்சர் ப.பசிதம்பரம். ஒருவேளை சோனியா, ராகுல் கைதாகினால் கட்சியின் இடைக்காலத் தலைவராக ப.சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை வழிநடத்தும அனுபவம், அரசியல் அனுபவம், தகுதி போன்றவை இருப்பதால், ப.சிதம்பரத்திடம் அந்தப் பொறுப்பை வழங்கவும் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.