சனாதனம் குறித்த சர்ச்சை கருத்து.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கர்நாடக நீதிமன்றம் சம்மன் - முழு விவரம் இதோ!
Udhayanidhi Stalin : சனாதன தர்மம் குறித்து சர்ச்சை மிகுந்த கருத்துக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியது குறித்து அவருக்கு சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது கர்நாடக நீதிமன்றம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியாவுடன் தொடர்புபடுத்தி பேசியது தொடர்பாக, கர்நாடகா பிரதிநிதி நீதிமன்றத்தில் மார்ச் 4ம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. பரமேஷ் என்ற நபர் உதயநிதி ஸ்டாலின் மீது தனிப் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து 46 வயதான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனது கருத்தை ஆதரித்ததுடன், இந்த சிக்கலை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
"நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம். எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது சித்தாந்தம் பற்றி மட்டுமே பேசினேன்" என்று கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற மார்ச் மாதம் 4ம் தேதி கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சனாதனம் என்பது டெங்கு மற்றும் மலேரியா போன்று ஒளிக்கப்படவேண்டிய ஒன்று என்று அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.