உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இதில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில், அதன் தலைவர் முலாயம்சிங்குக்கும், அவருடைய மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவின் விருப்பம் நிறைவேற்றப்படாததால், அவர் கடந்த 1ம் தேதி, கட்சியின் தேசிய செயற்குழுவை கூட்டி, தன்னை கட்சியின் தேசிய தலைவராக அறிவித்துக்கொண்டார்.
ஆனால், அந்த கூட்டம் செல்லாது என அவரது தந்தை முலாயம்சிங் தெரிவித்தார்.
இருதரப்பினரும், கட்சியும், கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் கமிஷனை அணுகி முறையிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த ஆதாரங்களை பரிசீலித்த தேர்தல் கமிஷன், இருதரப்பினரிடம் தனது விசாரணையை முடித்தது.இன்று தீர்ப்பை வெளியிட்டது. சைக்கிள் சின்னம், முலாயம்சிங் தரப்புக்கா? அகிலேஷ் யாதவ் தரப்புக்கா? இருந்த நிலையில் தேர்தல் கமிஷன் அகிலேஷ் யாதவ் தரப்பு கோரிக்கையை ஏற்று சைக்கிள் சின்னத்தை அவருக்கு ஒதுக்கியது. மேலும் அவரை தேசிய தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் நாளைதான் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் அகிலேஷ் யாதவ் தரப்பு நாளை மனுதாக்கல் செய்ய இப்போது இருந்த தயாராகி வருகின்றனர்
