இந்திய சின்னங்களை அலட்சியப்படுத்தினால் ‘அமேசானுக்கு’ ஆபத்து சக்தி கந்த தாஸ் கடும் எச்சரிக்கை.
கால் மிதியடியில் தேசியக்கொடி, செருப்பில் காந்திபடம் என இந்திய சின்னங்களையும், அடையாளங்களையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தும் வகையில் ‘அமேசான்’ நிறுவனம் செயல்பட்டால் பெரிய ஆபத்தில் சந்திக்க வேண்டயது வரும் என மத்திய பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவமதிப்பு
ஆன்-லைன் விற்பனை நிறுவனமான அமேசான் , கடந்த சில வாரங்களுக்கு முன் கனடா நாட்டில் கால் மிதியடியில் இந்தியாவின் தேசியக் கொடி வண்ணத்திலும், படத்தை பதித்தும் விற்பனைக்கு விளம்பரம் செய்து இருந்தது. இதைக் கண்ட கனடாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பார்த்து, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு புகார் செய்தார்.
எச்சரிக்கை
இதையடுத்து, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமேசான் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கையும், உடனடியாக தேசியக் கொடி பொறித்த பொருட்களை திரும்பப் பெற உத்தரவிட்டார். இல்லாவிட்டால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா மறுக்கப்படும் என தெரிவித்தார்.
செருப்பில் காந்தி
அதைத்தொடர்ந்து அமேசான் நிறுவனம் பொருட்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கோரியது. அதைத்தொடர்ந்து, குளியல் அறை, கடற்கரையில் பயன்படுத்தும் காலணிகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பதித்து விற்பனை வெளியிட்டது. இதைக் கண்டும் கோபமடைந்த மத்தியஅரசு அமேசான் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபத்தை எதிர்கொள்வீர்கள்
இது குறித்து பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்த தாஸ் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “ அமேசான் நிறுவனம் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும். இந்திய சின்னங்கள், அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் விசயத்தில் இருந்து தவறி நடக்கும் பட்சத்தில் அமேசான் நிறுவனம் கடும் ஆபத்தை சந்திக்க வேண்டியது வரும்.
அமேசான் இந்திய குடிமகன் என்று பதிவிட்டு இருந்தது. இதைக் கண்டு நான் வேதனை அடைந்தேன் அதற்கு மேல் படிக்க வேண்டும் என்ற தோன்றவில்லை. தொடர்ந்து இதுபோல் செய்துவந்தால், இந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் அந்தஸ்தில் அமேசான் நிறுவனத்தின் பெயர் நீக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
கண்ணியம், மதிப்பு வேண்டும்
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், “ இந்தியகொடி பதிக்கப்பட்ட கால்மிதியடிகள், காந்தியின் படம் பதிக்கப்பட்ட செருப்புகள் ஆகியவற்றை விற்பனைக்கு அமேசான் நிறுவனம் கொண்டு வந்த விசயம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நமது இந்தியத் தூதருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். இந்திய சின்னங்கள், அடையாளங்களை விற்பனை செய்யும் போது, கண்டிப்பாக கன்னியத்துடன், மதிப்புடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமேசான் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
