உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் சென்றால், பந்தள அரண்மனையில் உள்ள திருவாபரணப்பெட்டி, ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்ப முடியாது என்று வெளியான தகவலை, பந்தள மன்னர் சசிகுமார் வர்மா மறுத்துள்ளார். அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்ற அண்மையில் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

 

 கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கேரள தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டுள்ளார். சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கென தனியாக கழிவறை மற்றும் குளியறை கட்டப்படும் என்றும், பேருந்துகள் வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பந்தள மன்னர், சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் ஆபரணப்பெட்டிகளை ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்பமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்த்து வந்த பந்தள மகாராஜா ராஜசேகர பாண்டியன் என்பவர், மகனை அரசராக்க நினைத்தார். ஆனால், ஐயப்பனோ, துறவறம் பூண்டார். மேலும், தந்தை பந்தள மகாராஜா வருடத்துக்கு ஒரு முறை, தன்னை வந்து பார்க்கலாம் என்று ஐயப்பன் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், வருடந்தோரும் பந்தள அரண்மனையில் இருந்து மூன்று பெட்டிகளில் ஆபரணங்கள் எடுத்துச் சென்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். மகரஜோதி அன்று மட்டும் அவற்றை அணிந்து காட்சியளிப்பார் ஐயப்பன். 

சபரிமலை சந்நிதானத்துக்குள் பெண்கள் நுழைந்தால், பந்தள அரண்மனையில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சபரிமலையில் உள்ள பதினெட்டாம்படியைத் தாண்டி ஒரு பெண் சென்றாலும், பந்தள அரண்மனையில் உள்ள திருவாபரணப்பெட்டி, சபரிமலை சந்நிதானம் வராது என்று கூறப்பட்டுள்ளது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம். ஆனால் ஐயப்பனுக்குரிய திருபாவரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.

பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டாயமாக்கினால், சபரிமலை தந்திரிகளும் கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில் என தீர்மானம் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் வந்தால், பந்தள அரண்மனையில் உள்ள திருவாபரணப் பெட்டி, ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்ப முடியாது என்று வெளியான தகவலை பந்தள மன்னர் சசிகுமார் மறுத்துள்ளார்.