கேரளாவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என்று 
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க தலைவர் சீராய்வு மனுவை தாக்கல் 
செய்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு  வழங்கிது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 
அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீா்ப்பு 
வழங்கப்பட்டது.

 

அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று தீா்ப்பு வழங்கினா். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பா் 16 ஆம் தேதி முதல் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சபரிமலையில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சர் பினராயி விஜயனின் உத்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் பலர் உச்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி பேரணி நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும், நேற்று விளக்கு ஏந்தி, பேரணி நடத்தினர். இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க தலைவர் சைலஜா விஜயன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.