சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லப்போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் உள்ளிட்ட 6 இளம்பெண்கள் கேரளாவைச் சென்றடைய நிலையில் அவர் கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வாங்கியது. நீதிமன்ற உத்தரவு அரசியல் தலைவர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது, ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தது. மேலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறிவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை ஐயப்பபக்தர்கள் தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் கலவர பூமியானது. 

இந்நிலையில் கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். 

ஆனால் இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர்.

இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வருகை தந்தனர். இந்த தகவலை அறிந்த ஐயப்ப பக்தர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அனைத்து வாசல்கள் முன்பு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.