Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையில் உச்சக்கட்ட பதற்றம்... கேரள எம்எல்ஏ வீடுகளில் குண்டு வீச்சு..!

சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. பெண்கள் தரிசனம் செய்தவற்கு எதிர்ப்பு தெரித்து பாஜகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

sabarimala temple issue... violence bomb throw MLA house
Author
Kerala, First Published Jan 5, 2019, 12:15 PM IST

சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. பெண்கள் தரிசனம் செய்தவற்கு எதிர்ப்பு தெரித்து பாஜகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆதரவாகவும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது எதிரொலியாக மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து  இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதியில் திரும்பினர். sabarimala temple issue... violence bomb throw MLA house

,இந்நிலையில் பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர். இதனையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 sabarimala temple issue... violence bomb throw MLA house

இந்நிலையில் இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மாறி மாறி தாக்கப்பட்டு வருகிறது. தடசேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். sabarimala temple issue... violence bomb throw MLA house

இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்எல்ஏ சசியின் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் பாஜக எம்பி முரளிதரன் வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios