சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனத்தையொட்டி, லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்‍கு பூஜை மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.

மண்டல பூஜைக்‍குப் பின்னர் அடைக்‍கப்பட்ட சபரிமலை கோயில் நடை, மகரவிளக்‍குப் பூஜைக்‍காக மீண்டும் திறக்‍கப்பட்டது. இன்று காலை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்‍கு சூரியன் இடம்பெயர்ந்த நேரத்தில், ஐயப்பனுக்‍கு மகரசங்கராந்தி நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சன்னிதானத்திற்கு திருவாபரணப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, ஐயப்பனுக்‍கு ஆபரணங்கள் அணிவிக்‍கப்படுகின்றன.

இதன் பின்பு, சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது, பொன்னம்பலமேட்டில் ஜோதிவடிவில் ஐயப்பன், பக்‍தர்களுக்‍கு 3 முறை காட்சி அளிப்பார்.

ஜோதிவடிவாய் காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.