Asianet News TamilAsianet News Tamil

Sabarimala Pilgrims Accident : சபரிமலை விபத்தில் 64 பக்தர்கள் காயம்.. அரசிடம் அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்

சபரிமலை பேருந்து விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் மோட்டார் வாகனத் துறையிடம் விரிவான அறிக்கை கேட்கிறது.

Sabarimala bus accident: HC intervenes and seeks detailed report from Motor Vehicles Department
Author
First Published Mar 29, 2023, 10:06 AM IST

கேரள மாநிலம், சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பேருந்தில் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உள்பட 64 காயமடைந்தனர்.

தமிழகத்தில் இருந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து செவ்வாய்க்கிழமை பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 64 பேர் காயமடைந்தனர். சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். பிரேக் பெயிலியர் ஆனதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Sabarimala bus accident: HC intervenes and seeks detailed report from Motor Vehicles Department

காயமடைந்த பக்தர்கள் பத்தனம்திட்டா மற்றும் கோட்டயத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்த டிரைவர், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிலக்கல்லில் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள காவல்துறை மற்றும் மோட்டார் வாகனத் துறையினர் கூறுகையில், விபத்துக்குக் காரணமான அதிவேகமே சந்தேகம் தான் என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க..2வது திருமணம்.. குறுக்கே வந்த கள்ளக்காதலன்.. உல்லாசமாக இருந்த மனைவி - எதிர்பாராத ட்விஸ்ட்

Sabarimala bus accident: HC intervenes and seeks detailed report from Motor Vehicles Department

வாகனம் நன்றாக வேலை செய்ததும், பெர்மிட் மற்றும் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் என்பதும் கண்டறியப்பட்டது. திருப்பத்தில் அதிவேகமாக சென்றதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கு வருமாறு கோனி மருத்துவக் கல்லூரியின் நிபுணர்கள் குழுவை அமைச்சர் பி பிரசாத் அறிவுறுத்தினார். இந்த நிலையில்  உயர்நீதிமன்றம் மோட்டார் வாகனத் துறையிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

இதையும் படிங்க..புது ரூட்டில் திரும்பிய ஓபிஎஸ்.. நிம்மதியா விடமாட்டாங்க போலயே - புலம்பும் எடப்பாடி பழனிசாமி

Follow Us:
Download App:
  • android
  • ios