Sabarimala: சபரிமலையில் விமானநிலையம் அமைவது எப்போது? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
சபரிமலையில் விமான நிலையம் எப்போது அமையும் என்பது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் விமான நிலையம் எப்போது அமையும் என்பது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பத்தினம்திட்டா மாவட்டம், சபரிமலைக்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம்வரை பக்தர்கள் விரதமர் இருந்து மாலை அணிந்து வருகிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். சபரிமலைக்கு வருவதற்கு இன்னும் ரயில்பாதையோ, விமானப் போக்குவரத்தோ இல்லை.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! மார்ச் 13வரை ஒத்தி வைப்பு
சபரிமலைக்கு அருகே விமானநிலையம் எழுப்ப கடந்த 2020ம் ஆண்டு கேரள அரசு இடம் ஒதுக்கியது. இதற்கான திட்ட அறிக்கையை க்ரீன்பீல்ட் ஏர்போர்ட் கொள்கை அடிப்படையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் அளித்தது. ஆனால், இதுவரை விமானநிலையம் குறித்த எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில் சபரிமலை விமானநிலையம் குறித்து மாநிலங்களவையில் கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
கேரள மாநில தொழில்மேம்பாட்டுக் கழகம் சபரிமலையில் விமானநிலைம் அமைப்பது தொடர்பாக க்ரீன்பீல்ட் பாலிசி அடிப்படையில் அளித்த அறி்க்கையை இந்திய விமான ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் பரிசீலித்து வருகிறோம்.
தொழில்நுட்ப பொருளாதார ஆய்வு அறிக்கையையும் கேரள அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்தது, அந்த அறி்க்கையை இந்திய விமானநிலைய ஆணையம், டிஜிசிஏ ஆகியவற்றுக்கு அனுப்பி இருக்கிறோம்.
புனே கூகுள் நிறுவன அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இதுஅறிக்கையை க்ரீன்பீல்ட் விமானநிலையத்தின் 32-வது வழிகாட்டுக் குழுவிடமும் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விமானநிலையத்துக்கான நிலம், அனைத்து வசதிகள், சுயாட்சி நிறுவனம் மூலம் விமானநிலையம் அமைவதால் ஏற்படும் தாக்கம், வருமானம் ஆகியவைகுறித்த அறிக்கை கேட்டிருந்தது.
இந்த அறிக்கையும் கடந்த 2022, டிசம்பரில் கேரள வழங்கியுள்ளது. இந்த அறிக்கையை பரிசீலிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்