Asianet News TamilAsianet News Tamil

தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி - மேற்கு வங்க கும்பல் கைவரிசை

புதுச்சேரியில் மின்னஞ்சல் ஐடியை முடக்கி போலி சிம்கார்டை பயன்படுத்தி தொழிலதிபர்  வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

rupees 10 lakh fraud from businessman s bank account investigating gangs from west bengal
Author
First Published Oct 11, 2022, 12:00 PM IST

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடி பெரியார் நகரைச் சேர்ந்த பிரதாபன் என்பவர் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 தவணையாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

சாணி பவுடர், எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை - அமைச்சர் சுப்பிரமணியன்

இதனைக் கண்டு பிரதாபன் அதிர்ச்சியடைந்தார். ஆனால் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி அவரது செல்போன் எண்ணுக்கு வராமல், மின்னஞ்சல் ஐடிக்கு மட்டும் தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

விசாரணையில் பிரதாபனின் மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்தும், அவரது செல்போன் எண்ணை போலி சிம்கார்டு மூலம் மாற்றி மோடிசயில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த மோசடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்குக்கில் இந்த பணம் மாற்றப்பட்டுள்ளதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios