விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்காமல், விவாதத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி ஓடுவது சபைநாகரீகம் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்காமல், விவாதத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடி ஓடுவது சபைநாகரீகம் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. 2-வது நாளான இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசிஉயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராகப் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அதன்பின் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியதால் கூச்சல்,குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவை ஒத்தி வைக்கப்பட்டது
ராணுவ காலாட்படை பள்ளியில் வேலை... ரூ.81,100 ஊதியம்... யார் யார் விண்ணப்பிக்கலாம்!!
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும், அமைதிப்படுத்தவும் பிரதமர் மோடி எவ்வளவு வாரத்தைகளை தடை செய்தாலும் கவலையில்லை. ஆனால், சில பிரச்சினைகளுக்கு அவர் பதில் அளிக்கவேண்டும். தடை செய்யப்பட்டவார்த்தைகள் என்ற பட்டியல் கடந்த 1954லிரிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு 80ரூபாயைக் கடந்துவிட்டது, சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் ரூ.1000 கேட்கிறார், ரூ.1.30 கோடி இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள், இதில் ஜிஎஸ்டி வரிச்சுமையும் சேர்ந்துவிட்டது. மக்கள் பிரச்சினைகளை நாங்கள் எழுப்பும்போது யாரும் எங்களைத் தடுக்க முடியாது. மத்திய அரசுதான் பதில் அளி்க்க வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காமல், கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்தது ஓடும் பிரதமர் மோடியின் செயல் நாகரீகமற்றது” என விமர்சித்துள்ளார்.
நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!
அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி ஃபேஸ்புக் பக்கத்திலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்லார். அதில் “ மத்திய அரசு எதையும் அடக்குமுறையிலும், அதிகாரத்திலும் பெற முடியும் என நினைக்கிறது. எத்தனை வார்த்தைகளை தடை செய்து, எங்களை பேசவிடாமல் பிரதமர் மோடி முயற்சித்தாலும், அவர் அதற்கு பதில்அளிக்க வேண்டும்.
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு வகைகள், ரொட்டி ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சாப்பிடும் பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. சிலிண்டர் விலை ரூ.1053ஆகஉயர்ந்துவிட்டது. ஆனால், மத்தியஅரசோ, அனைத்தும் நன்றாகஇருக்கிறது என்று கூறுகிறது.

பணவீக்கம், விலைவாசி உயர்வு என்பது மக்கள் பிரச்சினை, அரசின் பிரச்சினையல்ல என்றுதானே அர்த்தம். பிரதமர் மோடி எதிர்க்கட்சியாக இருந்தபோது, பணவீக்கத்தை பெரிதாக்கினார். ஆனால், இன்று, சாமானிய மக்களை மிகப்பெரிய, ஆழமான பிரச்சினையில் தள்ளிவிட்டார். தினசரி மக்கள் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மூழ்கி வருகிறார்கள்.
உடைந்தது சிவசேனா ; ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் தனிக்குழு: சின்னத்துக்கு போராடத் தயார்: ராவத்
பிரதமர் மோடி மகிழ்ச்சியாக, தொடர்ந்து பொய்கள் பேசுகிறார். நானும் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும மக்களுக்கு எதிராக அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக இருப்போம். இதை நாடாளுமன்றத்தில் வலுவாக வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
