நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நுபுர் சர்மா நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நர்கெல்டங்கா காவல் நிலையத்திலும், பின்னர் கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையத்திலும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தனிநபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களின் கீழ் சர்மா மீது 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் காவல்துறையில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் நுபுர் ஷர்மா இரண்டு சம்மன்களையும் புறக்கணித்தார். பின்னர் நாடு முழுவதும் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்டிருந்தார். மேலும் அதில், பல்வேறு நீதிமன்றங்களில் இருக்கும் தம்மீதான வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும், மற்ற மாநிலங்களில் தன் மீது பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யக்கூடாது எனவும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: அரிசி, கோதுமை உள்ளிட்ட 14 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து?: நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நுபுர் சர்மாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங் தெரிவித்தார். இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நூபுர் சர்மா தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் பதிலளிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.