ராணுவ காலாட்படை பள்ளியில் வேலை... ரூ.81,100 ஊதியம்... யார் யார் விண்ணப்பிக்கலாம்!!

இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

indian army infantry school has released a notification to fill the vacancies for various posts.

இந்திய ராணுவ காலாட்படை பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள் விவரம்:

Stenographer Grade II, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கு மொத்தம் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிறுவனம்    Indian Army Infantry School
பணியின் பெயர்   Stenographer Grade II, Lower Division Clerk and other
பணியிடங்கள்    65
விண்ணப்பிக்க கடைசி தேதி   25.07.2022
விண்ணப்பிக்கும் முறை   Offline

 

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்லமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதனது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000 முதல் ரூ.81,000 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.07.2022 ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios