ஆந்திர சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே நடந்த வாக்குவாதம் அனல் பறக்கும் விதமாக அமைந்தது.

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. சுமார் 23 இடங்களைப் பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எதிர்க்கட்சியானது.

இந்த நிலையில் இன்று  ஆந்திர சட்டமன்றத்தில் மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசத்தையும் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார்.  விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க தெலுங்கு தேசம் அரசாங்கம் ஒரு பைசாவைக் கூட ஒதுக்கவில்லை என காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியினர், முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாகவும், விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாகவும், பேசிய ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கு இடையே  அனல் பறக்கும் வாதமாக மாறியது. ஜெகன் பேசிக்கொண்டிருக்கும் போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து எழுந்து எதிர்க்கட்சியினரை நோக்கி ஆவேசமாகப் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உங்களுடைய பார்வைக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல. என்னிடம் 151 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எழுந்து நின்றால் நீங்க தாங்க மாட்டீங்க. ஒருவர் வளர்வதால் மட்டுமே பெரிய ஆள் கிடையாது. முதலில் புத்தி வளர வேண்டும் என ஆக்ரோஷமாக பேசிய தால் அசெம்பிளியே அலண்டு போனது, ஜெகன் மோகன் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்த நாயுடு கோஷ்டி மிரண்டு பொட்டிப் பாம்பாய் சைலண்ட்டாக அமர்ந்தது.