Asianet News TamilAsianet News Tamil

இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கட்டாயம்... மன்சுக் மாண்டவியா அதிரடி!!

சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

rtpcr for those coming to India from 6 countries compulsory says mansukh mandaviya
Author
First Published Dec 29, 2022, 5:22 PM IST

சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா பாதித்து உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சீனா மட்டுமின்றி பிற நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும்... மகிந்த ராஜபக்ச வாழ்த்து!!

அந்த வகையில் இந்தியாவும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வருகிறது ரிமோட் மின்னணு வாக்கு எந்திரம் ! தேர்தல் ஆணையம் அறிமுகம்

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும். இந்த இணையதள பதிவேற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும். மேலும் 2023-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சர்வதேச பயணிகள் 72 மணி நேரத்துக்கு முன்பு இந்த ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios