BJP JDU Alliance update சூடுபிடிக்கும் பிஹார் அரசியல்!பாஜக-வை கைகழுவுங்க:நிதிஷ் குமார்-க்கு லாலு கட்சி அழைப்பு
பிஹார் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜவுக்கும், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையிலான கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிஹார் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜவுக்கும், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையிலான கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாஜகவை விட்டு நிதிஷ்குமார் வெளியே வந்தால், அவருக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நிதிஷ் குமார்-பாஜக உறவு முறிகிறது? பிஹாரிலும் கைவரிசையை காட்டிய பாஜக: காரணம் என்ன?
பாஜகவும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்து கடந்த 2020ம் ஆண்டு தேர்தலைச்சந்தித்தன. இதில் கடும் இழுபறிக்குப்பின் பாஜக, நிதிஷ் கூட்டணி வென்றது. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. கூட்டணியான காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு போதுமான எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் ஆட்சி அமைக்கவில்லை.
இதையடுத்து 2வது முறையாக பாஜக, ஐக்கிய ஜனத தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. 2 ஆண்டுகள் முடிந்தநிலையில், நிதிஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டு, தற்போது விரிசல் வரை வந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து நிதிஷ் குமார் ஆலோசித்து வருகிறார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை பிரி்த்து தனியாக ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக ஜேடியு மூத்த தலைவர் ஆர்சிபி சிங்கையும் பாஜக வளைத்துப் போட்டுள்ளது. இந்த விவகாரம் நிதிஷ் குமாருக்கு தெரியவரவே முன்னெச்சரி்க்கையாக கூட்டணியை கைகழுவ முடிவு எடுத்துள்ளதாகத்த தெரிகிறது.
பாட்னாவில் நாளை, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வதா இல்லையா என்பதை ஜேடியு முடிவு செய்யும். இதனால் பிஹார் அரசில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவை கைகழுவும் நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தளம் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
மின்சார சட்டத்திருத்த மசோதவை ஏன் 27 லட்சம் பொறியாளர்கள் எதிர்க்கிறார்கள்?
இந்நிலையில், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி இன்று அளித்த பேட்டியில் “ தனிப்பட்ட ரீதியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே நடப்பது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் இல்லாத நிலையில் பெரும்பான்மை உள்ள இரு கட்சிகளும் இதுபோன்ற கூட்டம் நடத்துவதற்கான காரணத்தையும் நிராகரிக்க முடியாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் வெளியேறினால் அவரை அரவணைத்துச் செல்வதுதான் எங்கள் விருப்பமாகஇருக்கும். பாஜகவுக்கு எதிராகப் போராட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடமைப்பட்டுள்ளது. எங்களுடன் இணைந்து நிதஷ் குமார் போராடத் தயாராகினால் அவருக்கு துணையாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் வரத் தயார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகள், லாலுபிரசாத் அவரின் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறந்து நிதிஷ் குமார் வருவாரா.
மின்சார சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே அறிமுகம்
அரசியலில் கடந்த காலக் கைதிகளாக இருக்க முடியாது. சோசலிஸ்ட்களாக இருந்தநாம் காங்கிரஸ் கட்சியை தொடக்கத்தில் எதிர்த்தோம். அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்தோம். இப்போது அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. காலத்தின் சவால்களுக்கு நாம் பதில் அளிக்க வேண்டும்” இவ்வாறு சிவானந்த திவாரி தெரிவித்தார்
- BJP-JDU Alliance
- Bihar BJP-JDU News
- Bihar Political Crisis
- Bihar Political Crisis Update
- Bjp Jdu Alliance Nitish Kumar
- Janata Dal (United)
- bihar
- bihar assembly
- bihar news
- bihar politics
- bjp
- cp singh vs lalan singh
- nitish bjp
- nitish kumar
- nitish kumar govt rjd
- nitish kumar news
- nitish kumar vs bjp
- rjd
- shrikant tyagi bjp